திருமணத்தின் போது யோனிப் பொருத்தம் அவசியம்!! அது பாலியலுடன் தொடர்பானது!

சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல்.

உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.

ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

நான் ஆய்வு செய்த வரை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள்/இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும்.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, குதிரைக்கு உரிய சுபாவங்கள்/தன்மைகள் சம்பந்தப்பட்டவர் மேற்கொள்ளும் உறவின் போது வெளிப்படும். இது காம சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில தம்பதிகளுக்கு யோனிப் பொருத்தம் இல்லாமல் போவது உண்டு. இதன் காரணமாக அவர்களில் ஒருவர் வேறு துணையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பண்பாடு, கலாசாரம் உடைகிறது. இதற்கு யோனிப் பொருத்தம் இல்லாத தம்பதிகளுக்கு உடலுறவில் நீடித்த தன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு இல்லாததே காரணம்.

கள்ளக்காதல், முறைதவறிய உறவுகள் உள்ளிட்ட விடயங்களை நாம் ஆய்வு செய்ததில் அந்த தம்பதிகள்/காதலர்களுக்கு யோனிப் பொருத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், ஒரு சில ஆண்களுக்கு எழுச்சிக் குறைபாடு காணப்படும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் (போகஸ்தானம்) காரணம். லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அதேபோல் 3க்கு உரியவரும் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எழுச்சிக் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் & பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் & பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம் என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது

உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, அதன் மிருகம் பெண் ஆடு. ஆண் நட்சத்திரம் சதயம், அதன் மிருகம் பெண் குதிரை. இவை இரண்டும் பகை பெறாததால் யோனிப் பொருத்தம் உண்டு.

Comments

Popular posts from this blog

பெண்கள் எதற்காக வழுக்கையுள்ள ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?

இலங்கையில் மார்பு தெரியும்படி திரிந்த வெளிநாட்டு பெண்!! உணர்ச்சியான சிங்களவருக்கு நடந்த கதி

ஆண்களின் கலவியில் ஒரு சுகம்